நெல்லை, ஆக. 5: நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு இயல் துறை சார்பில், மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாணவர் கோகுல்ராஜா வரவேற்று பேசினார்.
காலிபர் இன்டர்கனெக்ட் சொல்யூஷன்ஸ் நிறுவன சிக்னல் இன்டக்ரிட்டி சிமுலேஷன் டீம் தலைவர் தங்கபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மின்னணுவியல் தொடர்பியல் துறைத் தலைவர் ரங்கநாயகி மாணவர் மன்றத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, மாணவர் மன்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
மாணவர் மன்ற தலைவி காயத்ரி வரும் ஆண்டிற்கான மாணவர் மன்ற செயல்பாடுகளை அறிவித்தார்.
புதுமையான திட்டங்களை உருவாக்கிய இறுதியாண்டு மாணவர் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குரல் கட்டுப்பாட்டு ரோபோ திட்டத்தை உருவாக்கிய சுரேஷ், ஸ்ரீராம், சிபிஷா, சண்முகதுர்க்கா ஆகியோரும், நுண்ணறிவு கழிவு அகற்றும் ரோபோ படகு திட்டத்தை உருவாக்கிய நிரல் மூனல் அரசன், சந்தோஷ், சாத்தானாதன், ஸ்ரீராம் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
மாணவி மதுபாலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிந்தியாதேவி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.





