நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி அறி ஞர் அண்ணா அரங்கத்தில் ‘யங் ஐன்ஸ்டீன்-2025’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திட்ட கண்காட்சி நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் அமுதவாணன் தலைமை தாங்கி அறிவியல் துறை வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகள் குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் வரவேற்று பேசினார். மாணவிகள் மகாலட்சுமி, அஷ்வினி ஆகியோர் இளம் ஐன்ஸ்டீன் குறித்து பேசினர். பல்வேறு பிரிவுகளாக மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அதில் 9, 10-ம் வகுப்பு பிரிவில் கல்லிடைக்கு றிச்சி புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசும் பெற்றது. 11, 12-ம் வகுப்பு பிரிவில்சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், திருச்செந்தூர் காஞ்சி சங்கர வித்யாஷ்ரமம் 2-வது பரிசையும் பெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் சுரேஷ் தங்ககிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சத்திய அருணாசலம் உள்பட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.





