ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில், ‘ஏ.ஐ. விஸ்டா 2கே 26’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, சிந்தனைத்திறன், புதுமை ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாணவி காவியசக்தி வரவேற்று பேசினார். துறைத்தலைவி அன்னம்மாள் தொடக்க உரையாற்றினார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் அமுதவாணன் தலைமை தாங்கி பேசினார். மாணவர்கள் புதுமை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு எதிர்கால சவால்களை எதிர் கொள்ள தயாராக வேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக ரேபிட்பாட்ஸ் நிறு வன உற்பத்தி இயக்குனர் மணிபாரதி கலந்து கொண்டு பேசினார். மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றன. ஏற் பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயமேரி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.