ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பொறியியல் துறை சார்பில் ‘இக்னைட்-ஏ.ஐ. 2026′ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் தலைமை தாங்கி பேசினார். மாணவர்கள் புதுமை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடு பட்டு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஹரிநாத், பேராசிரியை சுலோச்சனா செயற்கை நுண்ணறிவு தொடர்பான தற்போதைய போக்குகள், அனைவ ருக்கும் ஏ.ஐ., எதிர்கால ஏ.ஐ. வளர்ச்சி குறித்து பேசினர். மாணவர்க ளுக்கு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுத்தொகை, கேடயம், சான்றிதழை கல்லூரி முதல்வர் வேலாயுதம் வழங்கினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் சுரேஷ் தங்ககி ருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் தீபக், முப்புடாதி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.