நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை, எந்திரவியல் துறைகளின் சார்பில், ரேஸ்-26, மெக்ஸ்கேலிபர்-26 என்ற தலைப்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந் தது. நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் வழிகாட்டுதலின்படி, அறங் காவலர் எழில்வாணன் தாங்கினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன் னிலை வகித்தார். மாணவர் சத்தியா வரவேற்று பேசினார்.
மாசிவ் புரோமோட்டர் அன்ட் பில்டர்ஸ் நிறுவன மேலாளர் எஸ்.அவுடை யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் பாடத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கற்க வேண்டும் என்று அறிவு றுத்தினார். மேலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கி ஊக்கமளித்து பேசினார். பேராசிரியர் சுரேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கட்டிடவியல் துறைத்தலைவர் குளோரி செல்வமனோ, எந் திரவியல் துறைத்தலைவர் சத்திய அருணாசலம், கட்டிடவியல் துறை ஒருங்கிணைப்பாளர் அசோக் ராம், எந்திரவியல் துறை ஒருங்கிணைப்பா ளர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.





