நெல்லை அடுத்த சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் குவாட் என்ஜினீயரிங்
சர்வீசஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டிற்
கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கல்லூரியின் கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் துறைகளுக்கும், குவாட் என்ஜினீயரிங் சர்வீசஸ்
நிறுவத்திற்கும் இடையே கையெழுத்தானது.
நிகழ்ச்சியானது ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா கலிபோர்னி |
யாவை சேர்ந்த கிரஸ்ட்மார்க் மில்வொர்க் நிறுவன என்ஜினீயரிங் மேலாளர் ஜான் பெர்ரி சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் வேலாயுதம் வரவேற்றார். குவாட் என்ஜினீயரிங் சர்வீசஸ் நிறுவன தலைமை
செயல் அதிகாரி சந்தோஷ் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி அறங்காவலர் எழில்வாணன்
வாழ்த்தி பேசினார்.
எந்திரவியல் துறை தலைவர் சத்திய அருணாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி நிர்
வாக அறங்காவலர் அமுதவாணன், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கட்டிடவியல் துறை தலைவி குளோரி செல்வ மனோ மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.