ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 147-வடு பிறந்த நாள் விழாவை ஆண்டு விழாவாக கொண்டாடினர். கல்லூரி அறங்காவலர் மதிவாணன், நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் அன்புவாணன், அறங்காவலர் எழில்வாணன் ஆகியோர் தலைமை தாங் கினர். சிறப்பு விருந்தினராக சொல்வேந்தர் சுகி சிவம் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் வரவேற்று பேசினார். கல்லூரி ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மாணவிகள் சங்கமித்ரா, ஏஞ்ச லின் ஜெனிட்டா ஜனனி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். 4-ம் ஆண்டு கணிப்பொறித் துறை மாணவி ராஜகாவியாவுக்கு ‘கல்வி சார் சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. கல்லூரியில் பயின்ற 4 ஆண்டுகளி லும் கல்வி, விளையாட்டு, கலை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு ‘துருவ நட்சத்திரம் 2026’ விருது வழங்கப்பட்டது. கணிப்பொறித்துறை மாணவி ஹரிதா அந்த விருதைப் பெற்றார். கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி கோகிலா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறைத்தலைவி மைதிலி, மின்னணுவியல் தொடர்பியல் துறைத்தலைவி தேவி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.