நெல்லை, ஜூலை 29-
நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற 400-க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். தற்போதைய மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வேலாயுதம் வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும் முன்னாள் மாணவர்கள் தகவல் பரிமாற வசதியாக “Alumni SEEDS” என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி நிறுவனரின் மகன் ஆலடி எழில்வாணன் கலந்து கொண்டு, முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலாளர் சுனில் பிரபாகர் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத்தலைவி ரெங்கநாயகி, மின்னியல் மின்னணுவியல் துறைத்தலைவர் எட்வின் ஐக் ராஜ் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்





