ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

ஆலடி அருணா கல்விக் குழுமத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்ச ருமான ஆலடி அருணா 21-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நெல்லை அருகே சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆலடி அருணா மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது. ஆலடி அருணா கல் விக்குழும நிர்வாக அறங்காவலர் அமுதவாணன் தலைமை தாங்கினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் பிரதிபா, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அசுரப் அலி, சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், ஆய்வக நுட்புனர் முத் துமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா கல்வி குழுமத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள் 50 பேர் ரத்த தானம் வழங்கினர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி குழுவினர் ரத்தம் சேக ரித்தனர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு மாநில குருதி பரிமாற்ற குழு மம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐன்ஸ் டீன் பொறியியல் கல்லூரி முதல்வர் வேலாயுதம், கலை அறிவியல் கல் லூரி முதல்வர் முருகன், ஐன்ஸ்டீன் செவிலியர் கல்லூரி முதல்வர் சுகுணா மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.