ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா நேற்று அக்கல்லூரியில் உள்ள பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் அமுதவா ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளரும், பொருளாளரு மான தமிழ்வாணன், அறங்காவலர்கள் மதிவாணன், அன்புவாணன், பேராசிரியர் எழில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கல்லூரி முதல்வர் வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிதத் துறை பேராசிரியரும், முன்னாள் துறைத் தலைவருமான தர்மராஜா கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசி னார். விழாவில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற 200 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டமும், 75 மாணவ, மாணவிகளுக்கு முதுகலை பட்டமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை வணிக மேலாண்மைத்துறை தலைவர் முருகேசன் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும், பேரா சிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.